இந்நிலையில் அனைத்து விதமான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு 16-ந் தேதி ஹைப்பர் மார்க்கெட் எனப்படும் லுலு மால் கோவையின் மையப்பகுதியான லட்சுமி மில்ஸ் வளாகத்தில் திறக்கப்பட்டது. குறிப்பாக அவிநாசி சாலை, ராமநாதபுரம் முதல் லட்சுமி மில்ஸ் ஸ்டாப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த லுலு மால் சாலையில் செல்வோர்களை கவரும் வகையில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் லுலு மால் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உள்ளே இருக்கக்கூடிய பொருட்கள் எங்கும் இல்லாத அளவில் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளதால் பொருளை வாங்குவதற்கு கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இதுமட்டுமல்லாமல் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் பொருட்களை வாங்க லுலு மாலில் மக்கள் அனைவரும் குவிந்த வண்ணம் உள்ளனர்.