சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, நாற்பது தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திமுக தலைவருக்கு பாராட்டு விழா என கோவையில் நடைபெறவிருந்த முப்பெரும் விழாவின் தேதி மற்றும் இடமானது மாற்றப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த முப்பெரும் விழா தேதி மற்றும் இடம் ஆனது மாற்றப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ஆம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற "கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட"த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா - நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா - சீர்மிகு வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு முதல்வர், கட்சித் தலைவருக்குப் பாராட்டு விழா என "முப்பெரும் விழா" ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக "ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்" நடைபெறுகிறது.