தென்மேற்கு பருவ மழை அதிகரிக்க இருந்த நிலையில், கோவை மற்றும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் கொடுக்க பட்ட நிலையில் நாளை மற்றும் 15,16 ஆகிய மூன்று நாட்கள் தென்மேற்கு பருவமழை உக்கிர நிலையில் இருக்கும் என தனியார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால் கோவை உட்பட ஒருசில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் இல்லை என அவர் கூறியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், " தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது சுற்று கனமழை இன்று முதல் தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை பாலக்காடு, கணவாய், மேற்கு கோவை நீலகிரி, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் வலு பெற தொடங்கியுள்ளதுஎனவும், தென்மேற்கு பருவமழை ஜூன் 14, 15, 16 ஆகிய தேதிகளில் உக்கிர நிலையை அடைந்து மிக கனமழை மேற்கு தொடர்ச்சி மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.