• 18 Apr, 2026

ஆன்லைன் டிரேடிங் மோசடி – 15 லட்சம் இழப்பு

ஆன்லைன் டிரேடிங் மோசடி – 15 லட்சம் இழப்பு

கோவையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் 15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து ஒரு பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

 

Screenshot 2026-02-26 145227
 

 

இதனை நம்பிய அந்த பெண் பல தவணைகளில் மொத்தம் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பின்னர் பணத்தை திரும்ப பெற முயன்றபோது, தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அறியாத நபர்களின் ஆன்லைன் முதலீட்டு ஆலோசனைகளை நம்ப வேண்டாம் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.