• 16 Apr, 2026

ரஜினியின் 170வது படத்தில் அமிதாப்பச்சன்!

ரஜினியின் 170வது படத்தில் அமிதாப்பச்சன்!

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இது உண்மையானால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரு சூப்பர் ஸ்டார்களும் இணையும் படமாகவும், அமிதாப்பச்சனின் முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் அமையும்.

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், தற்போது இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதற்கு முன், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், பின்னர் நடிகர் அர்ஜூனிடம் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் புதிய அப்டேட்டாக நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமிதாப்பச்சனிடம் கதை சொல்லப்பட்டு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையானால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் படமாக இது அமையும். மேலும், அமிதாப்பச்சனின் முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் இந்த படம் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.