• 16 Apr, 2026

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் இளம் தலைவர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் இளம் தலைவர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களும், இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இந்த சர்வதேச உச்சி மாநாடு, காலநிலை மாற்றம், நிலைத்த வளர்ச்சி மற்றும் எதிர்காலத் தலைமையைக் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும் உலகளாவிய பார்வையையும் உருவாக்கும் நோக்கில் நடைபெற்றது.

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகம் இணைந்து, காலநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத் தலைமையை மையமாகக் கொண்ட சர்வதேச உச்சி மாநாட்டை நடத்தின. இதில் கலந்து கொண்ட டாக்டர் கரோலின் பெய்லன், இந்தியாவிலிருந்தே அடுத்த நூற்றாண்டின் உலகத் தலைவர்கள் உருவாவார்கள் எனத் தெரிவித்தார்.

விழாவில் இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, குமரகுரு மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்வி உதவித்தொகை, மாணவர் பரிமாற்றத் திட்டம் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டன.