• 18 Apr, 2026

கோவை–அபுதாபி இண்டிகோ விமானம் ரத்து

கோவை–அபுதாபி இண்டிகோ விமானம் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, கோவையிலிருந்து அபுதாபி செல்லும் இண்டிகோ விமான சேவைகள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பாதுகாப்பு சார்ந்த பதற்றம் காரணமாக, கோவை நகரிலிருந்து அபுதாபி செல்லும் IndiGo விமான சேவைகள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களால் வெளிநாடு செல்ல இருந்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

 

Screenshot 2026-02-26 145227

டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள் விமான நிறுவனத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாற்று விமான ஏற்பாடுகள் மற்றும் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் (refund) விவரங்கள் குறித்து இண்டிகோ சார்பில் தகவல் வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்தக்கட்ட அறிவிப்பு வரும் வரை இந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை.