• 19 Apr, 2026

அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை

அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை

மேம்பாலப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு.

அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளதால், பழையூர் பிரிவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், குறிப்பாக பீக் நேரங்களில் அதிக நெரிசல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

 

Screenshot 2026-02-26 153509
 

 

 

இதனால் வாகன ஓட்டிகள் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்கள் பொறுமையுடன் வாகனங்களை இயக்கி போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.