கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோவையில் ‘வடம்’ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளையை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்து திருவிழா போல் கொண்டாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கமாக திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் ‘வடம்’ திரைப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாகக் கொண்டதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.
கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் படம் வெளியானதை ரசிகர்கள் மேளதாளம் முழங்க திருவிழா போல கொண்டாடினர். திரையரங்கு வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட காளைக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்து மரியாதை செலுத்தினர்.
ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டை போற்றும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விமலுக்கு நல்ல ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.
இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர், வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகள் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் விமல் வழிபாடு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
திரையரங்கு வளாகத்திற்கு காளையுடன் ரசிகர்கள் வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்