• 19 Apr, 2026

அன்னபூர்ணா ஹோட்டலில் மெனு குறைப்பு அறிவிப்பு

அன்னபூர்ணா ஹோட்டலில் மெனு குறைப்பு அறிவிப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் LPG தட்டுப்பாடு காரணமாக கோவையின் புகழ்பெற்ற அன்னபூர்ணா ஹோட்டல் தனது உணவுப் பட்டியலை குறைப்பதாக அறிவித்துள்ளது.

கோவையின் புகழ்பெற்ற அன்னபூர்ணா ஹோட்டல் தனது உணவுப் பட்டியலில் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததும், சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்பட்டதும் இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Screenshot 2026-02-26 160509
 

 

இதனால் இன்று முதல் ஹோட்டலில் வழங்கப்படும் சில உணவுப் பொருட்கள் தற்காலிகமாக மெனுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. செலவினம் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிலைமை சீராகும் வரை இந்த மெனு குறைப்பு நடைமுறையில் இருக்கும் என்றும், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.