• 18 Apr, 2026

மருதமலை கோவிலில் இன்று முதல் செல்போன் தடை

மருதமலை கோவிலில் இன்று முதல் செல்போன் தடை

பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்யும் வகையில் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (மார்ச் 10) முதல் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்யும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி இன்று (மார்ச் 10) முதல் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும் முன் ராஜகோபுர நுழைவு வாயிலிலேயே தங்களுடைய செல்போன்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Screenshot 2026-02-26 154907
 

பக்தர்கள் தரிசனத்தின் போது அமைதியை பேணும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைவரும் விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.