கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
திருச்சியில் நடைபெற்ற “வான் அமிர்தம்” கருத்தரங்கில், மழைநீரை முறையாக சேமித்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “வான் அமிர்தம்” என்ற மாபெரும் மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கு SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அதிகரிக்கும் உப்புத்தன்மையை கட்டுப்படுத்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டது. நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு “வாட்டர் வாரியர்ஸ்” விருதுகள் வழங்கப்பட்டன. கோவை குளங்கள் அமைப்பின் மணிகண்டன், சுஜாதா ஐயப்பா மசாகி, செல்வராஜ், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இத்தகைய கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என்றார்.
முன்னாள் நீர் தொழில்நுட்ப மைய இயக்குநர் பன்னீர்செல்வம், வீடுகளில் ஒரு சொட்டு நீர் வீணானாலும் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீணாகும் என எச்சரித்தார். மேலும், அரிசி விளைவிக்க பயன்படுத்தப்படும் நீரை பாதியாகக் குறைத்தும் அதிக மகசூல் பெற முடியும் எனவும், சொட்டு நீர்ப்பாசனத்தை மண்ணுக்குக் கீழும் பயன்படுத்தலாம் எனவும் விளக்கினார்.
கர்நாடக முன்னாள் விஞ்ஞானி சிவகுமார், “தண்ணீர் பஞ்சம் என்பது மேலாண்மை குறைபாடே தவிர உண்மையான பற்றாக்குறை அல்ல” எனக் கூறி, மழைநீரை சரியான முறையில் சேமித்தால் பெரிய மாற்றம் ஏற்படும் என வலியுறுத்தினார். மழைநீரை வடிகட்டிகள் மூலம் சேமித்து, சூரியஒளி புகாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், மழைநீர் சேமிப்பு அளவை கணக்கிட ‘RWH Advisor’ செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுஜாதா ஐயப்பா மசாகி, மழைநீர் சேமிப்பு மூலம் மானாவாரி நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்கும் வழிமுறைகளை விளக்கினார். சிவசுப்பிரமணியன், RO நீரை விட மழைநீரே குடிநீருக்கு சிறந்தது எனக் கூறி, ஒரே மழையில் 4000 லிட்டர் நீரை சேமிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் விவசாய நிலங்களுக்கு ஏற்ற நீர் சேமிப்பு முறைகள் குறித்து பகிர்ந்தனர். கருத்தரங்கு வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு கருவிகள், நவீன நீர்ப்பாசன முறைகள் மற்றும் இயற்கை வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்