கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையின் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன.
இந்த பயிற்சிகளில் வாக்குப்பதிவு நடைமுறை, வாக்குச்சாவடி அமைப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்பாடு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்படுகிறது. மேலும், தேர்தல் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றியும் அதிகாரிகள் அறிவுரை வழங்குகின்றனர்.
பயிற்சியில் பங்கேற்கும் ஊழியர்கள் தங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவுபெற்று வருகின்றனர். சீரான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்த இந்த பயிற்சிகள் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்