• 18 Apr, 2026

மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயக் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே மின் வேலியில் சிக்கி மூர்த்தி (46) என்ற விவசாயக் கூலித் தொழிலாளி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Screenshot 2026-02-26 145227
 

 

 

வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் தவறுதலாக சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அனுமதியின்றி அல்லது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் மின் வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.