கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோவையில் கேஎம்சிஹெச் மருத்துவமனை 50 ‘கிரையோஅப்லேஷன்’ சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச், சீரற்ற இதயத் துடிப்பு குறைபாடு (Atrial Fibrillation) சிகிச்சையில் முக்கிய சாதனையை எட்டியுள்ளது. இதயத் துடிப்பு சீராக இல்லாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிநவீன ‘கிரையோஅப்லேஷன்’ (Cryoablation) சிகிச்சையை 50 பேருக்கு வெற்றிகரமாக செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த சாதனையால், இந்தியாவின் மிகச்சிறந்த 6 மருத்துவமனைகளில் ஒன்றாக கேஎம்சிஹெச் இணைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே அதிக அளவில் இந்த சிகிச்சையை மேற்கொண்ட ஒரே மருத்துவமனையாகவும் திகழ்கிறது.
சீரற்ற இதயத் துடிப்பு காரணமாக இரத்தக் கட்டிகள் உருவாகி பக்கவாதம் ஏற்படும் அபாயம் 3 முதல் 5 மடங்கு அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வாக, ‘கிரையோபலூன்’ தொழில்நுட்பத்தின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் இதயத்தில் ஏற்படும் மின்தூண்டல் கோளாறுகளை சரி செய்யும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த முறையில், தொடைப் பகுதியில் சிறிய துளை மூலம் கருவி இதயத்திற்குள் செலுத்தப்பட்டு, அதிக குளிர்ச்சி மூலம் பாதிக்கப்பட்ட திசுக்கள் உறைய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் இதயத் துடிப்பு மீண்டும் இயல்பாக மாறுகிறது.
மேலும், நோயாளிகளுக்கான பிந்தைய பராமரிப்பில் இரத்த அழுத்தம், உடல் பருமன், தூக்கக் கோளாறுகளுக்கான தனிப்பட்ட சிகிச்சை, மொபைல் ஆப் மூலம் இதயத் துடிப்பு கண்காணிப்பு மற்றும் தொலை மருத்துவ ஆலோசனை போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.
கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, இந்த சாதனை உலகத் தரமான சிகிச்சையை மக்களுக்கு கொண்டு செல்லும் உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றார். நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, 50 சிகிச்சைகள் மூலம் 50 பேரின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இச்சிகிச்சை பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான முறையாகும் என இருதய நிபுணர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் கூறினார்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்