• 16 Apr, 2026

அரசு ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'; இலவசமாக ரூ.ஒரு கோடிக்கு இன்சூரன்ஸ்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'; இலவசமாக ரூ.ஒரு கோடிக்கு இன்சூரன்ஸ்

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 1 கோடி வரை இன்சூரன்ஸ் “ஜாக்பாட்” என்று கூற வழியில்லை என்றாலும், முழு இலவச காப்பீட்டு (insurance) திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது

இது தவிர, அரசு ஊழியருக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாயும், அரசு ஊழியர் எதிர்பாராமல் விபத்தில் இறந்தால், திருமண வயதை எட்டியமகள்களின் திருமண செலவுக்கு 10 லட்சம் ரூபாயும், மகன் அல்லது மகளின் உயர் கல்விதொடர 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையும் வழங்குவதாக, அரசு ஊழியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ள எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி., இந்தியன், கனரா, ஆக்சிஸ், பேங்க் ஆப் பரோடா, யூனியன்பேங்க் ஆப் இந்தியா ஆகிய, ஏழு வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.தமிழக அரசு அரசாணை எண் 113 கருவூலம் மற்றும் கணக்குகள் துறை நாள் 14.5.2025 இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசு ஊழியர் சங்கங்கள், தங்கள் உறுப்பினர்களின் நலன் கருதி இப்பணிகளை தாமாக முன்னெடுத்து செய்து வருகின்றன.