கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கூகுள் பே (G Pay), போன்பே (PhonePe) போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே (G Pay), போன்பே (PhonePe) போன்ற UPI செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பயனர்கள் அதிக கவனத்துடன் செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் payment request-களை ஏற்க வேண்டாம் என்றும், OTP, UPI PIN போன்ற முக்கிய ரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மோசடிக்காரர்கள் போலியான லிங்குகள் அல்லது அழைப்புகள் மூலம் பயனர்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சந்தேகமான மெசேஜ்கள், லிங்குகள் போன்றவற்றை திறக்காமல் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான முறையில் மட்டுமே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கி மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்