கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
நிசான் மோட்டார் இந்தியா ரூ.5.65 லட்சம் ஆரம்ப விலையில், இந்திய குடும்பங்களை மையமாகக் கொண்ட புதிய 7-சீட்டர் எம்பிவி நிசான் கிராவிட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
நிசான் மோட்டார் இந்தியா, தனது புதிய 7-சீட்டர் எம்பிவி காரான நிசான் கிராவிட்-ஐ ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்டு, இந்திய வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாடல், நிசானின் புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புத் திட்டத்தின் முதல் வெளியீடாகும்.
கிராவிட் 2 முதல் 7 பயணிகள் வரை அமரக்கூடிய மாடுலர் இருக்கை அமைப்புடன் வருகிறது. மூன்றாவது வரிசை இருக்கைகளை அகற்றினால், பூட் ஸ்பேஸ் 625 லிட்டராக விரிவாக்கலாம். 5-சீட்டர் அமைப்பில் 625 லிட்டர், 6-சீட்டரில் 320 லிட்டர், 7-சீட்டரில் 84 லிட்டர் கொள்ளளவு வழங்கப்படுகிறது.
மாடல் விலை விவரங்கள் (எக்ஸ்-ஷோரூம்):
விஸியா: ரூ.5.65 லட்சம்
அசென்டா: ரூ.6.59 லட்சம்
என்-கனெக்டா: ரூ.7.20 லட்சம்
டெக்னா: ரூ.7.91 லட்சம்
என்-கனெக்டா AMT: ரூ.7.80 லட்சம்
டெக்னா AMT: ரூ.8.49 லட்சம்
இந்த மாடல், இடவசதி, நடைமுறை பயன்பாடு, சொகுசு மற்றும் கம்பீரமான தோற்றம் ஆகியவற்றை இணைத்து, இந்திய குடும்பங்களின் வளர்ந்து வரும் பயண தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்