• 16 Apr, 2026

5.45 லட்சம் வாசிப்பு புத்தகம் 'ரெடி'! அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தாண்டு முதல் வழங்க திட்டம்

5.45 லட்சம் வாசிப்பு புத்தகம் 'ரெடி'! அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தாண்டு முதல் வழங்க திட்டம்

கோவை; அரசு பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2025-26 கல்வியாண்டுக்காக 51 தமிழ் வழி புத்தகங்களும், 30 ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகங்களும் என மொத்தம் 81 புத்தகங்கள் அச்சடித்து, அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திற்கு மட்டும் 5,45,958 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில், நுழை பிரிவில், 'குட்டிச் சுண்டெலி', 'என் ஆட்டுக்குட்டி எங்கே' உள்ளிட்ட 44 புத்தகங்கள்; நட பிரிவில், 'கொட்டாங்குச்சி இட்லி', 'என் நண்பர்கள் எங்கே' உள்ளிட்ட 12 புத்தகங்கள்; ஓடு பிரிவில்,'பனை சொன்ன கதை' உள்ளிட்ட 13 புத்தகங்கள்; பற பிரிவில், 11 புத்தகங்கள்; பாடல் பிரிவில் 1 புத்தகம் உள்ளது. கடந்த கல்வியாண்டில் 123 புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 81 புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன.அரசு பள்ளிகளுக்கு மட்டும்வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இவை, அரசு பள்ளிகளுக்கு பிரிவு வாரியாகவும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு, வகுப்புவாரியாகவும் வழங்கப்படவுள்ளன.