5.45 லட்சம் வாசிப்பு புத்தகம் 'ரெடி'! அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தாண்டு முதல் வழங்க திட்டம்
கோவை; அரசு பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
தமிழக பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் நோக்கில், "ஓடி விளையாடு பாப்பா!" என்ற தலைப்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்தில் இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும்.உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களை இப்பாட வேளைகளில் பங்கேற்க உறுதி செய்ய வேண்டும்.வாரத்தில் ஒரு நாள், பள்ளி நேரம் முடிந்தவுடன், அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும் மாணவர் எண்ணிக்கை அதிகமான பள்ளிகளில், வகுப்புகளின்படி தனித்தனியாக உடற்பயிற்சி நடத்தப்பட வேண்டும் .
உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை, ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் முன்னிலையில், காலை வணக்கம் கூட்டம் நடைபெற வேண்டும்.ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (பேச்சு, கவிதை, நாடகம், பாடல் போன்றவை) நடத்தப்பட வேண்டும்.
மதிய உணவு இடைவெளி முடிந்த பின்பு, 20 நிமிடங்கள், ஆசிரியர்கள் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்கள் சிறார் இதழ்கள், செய்தித்தாள்கள் மற்றும் நூலகப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.வாரத்தில் ஒரு பாடவேளை, நன்னெறி வகுப்பாக ஒதுக்கப்பட வேண்டும்.வாரத்தில் ஒரு பாடவேளை, நூலக செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும், இதில் மாணவர்கள் புத்தகங்களை வாசித்து, அதன் சாராம்சத்தை குறிப்பேடுகளில் பதிவு செய்ய வேண்டும்
பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மை:
ப ள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு முன், அந்தந்த வகுப்புகளின் பெற்றோர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை; அரசு பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
பிரதமர் மோடி வரும் வெள்ளிக்கிழமை தேசிய பொது விடுமுறை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளி, அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த தகவல் உண்மையா என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து, இன்று, ஜூன் 2, 2025, புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன .