• 16 Apr, 2026

“10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் உடல் உறுப்பு தானம்: 5 பேருக்கு புதிய வாழ்க்கை”

“10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் உடல் உறுப்பு தானம்: 5 பேருக்கு புதிய வாழ்க்கை”

10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் விபத்துக்குப் பின் மூளைச்சாவடைந்த நிலையில், பெற்றோர் உடல் உறுப்புகளைத் தானம் செய்ததால் ஐந்து பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்தது.

Kerala | “மகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட குழந்தைகளைக் காணச் செல்வோம்” – ஆலின் ஷெரினின் பெற்றோர்

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் – ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம்.

பிறந்து 10 மாதங்களே ஆன ஆலின் ஷெரினுடன் ஷெரின் ஆன் ஜான் கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது, கோட்டயம் அருகே விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை உள்ளிட்டோர் திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆலின் ஷெரினுக்கு கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களில் மிகவும் வயது குறைந்தவர் ஆலின் ஷெரின் ஆபிரகாம் என பினராயி விஜயன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

குழந்தையின் இறுதிச்சடங்கு நிறைவடைந்த நிலையில், ஒரே மகளின் பிரிவால் துயருற்ற பெற்றோர் குழந்தையின் விளையாட்டுப் பொம்மைகளை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது, உறவினர்கள் மற்றும் பொதுமக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.