கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
சிறுதுளி அமைப்பு சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் 20 ஏக்கர் நிலத்தில் 17,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பசுமை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுதுளி அமைப்பு 23 ஆண்டுகளாக நீர்நிலைகள் புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பசுமைச் செயல்பாடுகளை கோயம்புத்தூர் மற்றும் பிற மாவட்டங்களில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய மைல்கல்லாக, இதுவரை பத்து இலட்சம் மரங்களை நடவு செய்து பராமரிக்கும் சாதனையை சிறுதுளி கடந்துள்ளது.
சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை முன்னிறுத்தி, கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தாலுகா பகுதியில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 17,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சி அப்பகுதியில் பசுமை வளத்தை அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சமூக பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதில், JS Auto-Cast Foundry India Private Limited நிறுவனத்தின் நிதி உதவியுடன் 10,000 மரக்கன்றுகள் “பெரியம்மன் கோவில் வனம்” திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், Bull Machines Private Limited நிறுவனத்தின் ஆதரவுடன் 7,500 மரக்கன்றுகள் “கே.பி.கே. வனம்” என்ற திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முக்கிய முன்னெடுப்பாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு நிகழ்வில் முதன்மை விருந்தினராக சங்கேத் பல்வந்த் வாகே, கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) கலந்து கொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக உஷா நந்தினி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கலந்து கொண்டார். மேலும், JS Auto-Cast Foundry India Private Limited நிறுவனத்தின் துணை பொது மேலாளர் (நிதித் துறை) தஷ்ரவன் சேனாபதி, Bull Machines Private Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன், சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
இவ்விழாவில் உள்ளூர் பங்குதாரர்கள், நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 30 பேர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்) மற்றும் எஸ். என். எஸ். தொழில்நுட்பக் கல்லூரி (மேலாண்மை ஆய்வுகள் துறை) ஆகியவற்றிலிருந்து 100 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த திட்டங்களுடன் சேர்த்து, சிறுதுளி அமைப்பு கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 இடங்களில் மொத்தமாக 10,00,000 மரங்களை நடவு செய்து பராமரித்து வருகிறது. கோயம்புத்தூர் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில், இத்தகைய பசுமைத் திட்டங்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதுகுறித்து பேசிய சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நீர்வளத்துறை, வனத்துறை, கோவை மக்கள், அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிதி ஆதரவாளர்கள் வழங்கிய முழுமையான ஒத்துழைப்பினாலேயே இந்த சாதனை சாத்தியமானது என தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்