கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
நாடு தழுவிய தொழிலாளர்–விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு, ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்பாரா என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தொழிலாளர்களும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாடு தழுவிய போராட்டத்திற்கு ராகுல் காந்தி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காக தெருக்களில் இறங்கி குரல் கொடுக்கின்றனர். நான்கு தொழிலாளர் சட்டங்கள் தங்கள் உரிமைகளை பலவீனப்படுத்தும் என தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். வர்த்தக ஒப்பந்தங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கவலைப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) சீர்குலைக்கப்பட்டு, கிராமப்புற மக்களின் கடைசி நம்பிக்கையும் பறிக்கப்பட்டுள்ளதாக பாஜக அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“இப்போதாவது தொழிலாளர்கள், விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்பாரா? அல்லது அவர்மீது உள்ள நெருக்கடி அதிகமாக உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்துடன் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்