கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
ஊட்டியில் ரூ.499 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நீலகிரி மலை மாவட்ட மக்களுக்கு உயர்தர அரசு மருத்துவ சேவை கிடைக்கச் செய்து, அவசர நேரங்களில் உயிர் காக்கும் சிகிச்சையை அருகிலேயே வழங்கும் முக்கிய மையமாக இது அமைய உள்ளது.
Ooty | சிம்லாவை மிஞ்சும் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை… எல்லாமே சிறப்புதான்!
ஊட்டியில் ரூ.499 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். மலைப்பிரதேசத்தில், நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை, நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கனவாக இருந்து வந்த ஒன்றாகும்.
நீலகிரி மாவட்டம் பழங்குடிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு இதுவரை அரசு மருத்துவமனைகளே முக்கிய மருத்துவ சேவையை வழங்கி வந்தன. உயர்தர சிகிச்சைக்காக கோவை, கேரளா, பெங்களூரு போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருந்தது.
இதனால், அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்லும் போது “கோல்டன் ஆவர்” எனப்படும் உயிர் காக்கும் பொன்னான நேரம் பயணத்திலேயே வீணாகும் நிலை தொடர்ந்தது. பல நேரங்களில் மலைச் சாலைகள், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நவீன அறுவை சிகிச்சை மையங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), அவசர சிகிச்சை பிரிவு, நவீன ஆய்வகங்கள் மற்றும் மேம்பட்ட பரிசோதனை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவக் கல்விக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் இதில் உள்ளன.
மலை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு தரமான அரசு மருத்துவ சேவை அருகிலேயே கிடைக்கச் செய்வதோடு, மருத்துவ மாணவர்களுக்கு உயர்தர பயிற்சி மையமாகவும் இந்த மருத்துவமனை செயல்பட உள்ளது. ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டதன் மூலம், நீலகிரி மாவட்டத்தின் சுகாதார கட்டமைப்பு ஒரு புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்