• 16 Apr, 2026

கோவை கவுண்டம்பாளையத்தில் மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டம் துவக்கம்

கோவை கவுண்டம்பாளையத்தில் மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டம் துவக்கம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நியூ கோவை ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டம் சிறப்பு விழாவுடன் துவங்கப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில், New Coimbatore Real Estate நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த திட்டத்தை எம். மாணிக்கம், சக்தி குழுமத்தின் தலைவர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். விழாவில் Universal Radiators Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் மாதவன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாட்டின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான சக்தி குழுமம், அருட்செல்வர் டாக்டர் என். மகாலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்டு, சர்க்கரை, ஜவுளி, போக்குவரத்து, நிதி, காபி எஸ்டேட் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்துறை வணிகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து 1.3 கி.மீ. மற்றும் தடாகம் சாலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்திட்டத்தில் சிறுவாணி குடிநீர், தார்சாலை, தெருவிளக்குகள், அடித்தள வடிகால், சுற்றுச்சுவர், மேம்படுத்தப்பட்ட பூங்கா, பிக்கிள்பால் மைதானம், நடைபாதை உள்ளிட்ட பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட நகரமைப்பு திட்ட ஒப்புதல் மற்றும் நில ஆவண ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்ற இந்த திட்டம், வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட 53 பிரீமியம் வீட்டு மனைகளை கொண்டதாகும். சுமார் 3.75 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், தற்போது 50 சதவீத வீட்டு மனைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய எம். மாணிக்கம், பவுண்டேஷன் ஒன் குழுமத்தின் தலைமையில் ராஜ்குமார் அவர்கள் கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல வெற்றிகரமான வீட்டு மனை மற்றும் குடியிருப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப ரூ.25 லட்சம் முதல் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த துவக்க விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.