கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
நீர் தேக்கமும் பாசன வசதியும் மேம்பட, சித்திரைச்சாவடி தடுப்பணையை உடனடியாகத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
சித்திரைச்சாவடி தடுப்பணை பகுதியில் உள்ள தடுப்பணை நீண்ட காலமாக தூர்வாரப்படாததால், மணல் மற்றும் கழிவுகள் அதிகமாக தேங்கி நீர் ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, பாசனத்திற்கு தேவையான நீர் சரிவர கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக சாகுபடி காலம் நெருங்கி வரும் நிலையில், தடுப்பணையை உடனடியாகத் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக்காலத்திற்கு முன்பாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், நீர் சேமிப்பு அதிகரித்து விவசாயிகளுக்கு பெரும் பயன் கிடைக்கும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்