• 16 Apr, 2026

ஸ்டார் ஹெல்த் திண்டுக்கல் கிளை திறப்பு

ஸ்டார் ஹெல்த் திண்டுக்கல் கிளை திறப்பு

Star Health and Allied Insurance நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட திண்டுக்கல் கிளை அலுவலகத்தை ஆர். சச்சிதானந்தம் எம்.பி. திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் மருத்துவக் காப்பீட்டு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய பேருந்து நிலையம் அருகே இந்த புதிய கிளை செயல்படத் தொடங்கியுள்ளது.

Star Health and Allied Insurance நிறுவனம், தமிழ்நாட்டில் தனது கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட திண்டுக்கல் கிளை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்தது. இந்த புதிய கிளை அலுவலகத்தை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. திறந்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் வலுவான இருப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் டாப் அனில் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என். சுகுமார், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே. ஸ்ரீ சரவணன், மூத்த மருத்துவ வல்லுநர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

BE32B8B7-6943-4B80-AC65-A0F5C74E2A1B
 

 

நிகழ்வில் உரையாற்றிய எம்.பி. ஆர். சச்சிதானந்தம், “திண்டுக்கல் போன்ற வளர்ந்து வரும் மாவட்டங்களில் மருத்துவக் காப்பீட்டுச் சேவைகளை விரிவுபடுத்துவது மிகவும் அவசியமானது. மருத்துவ அவசர காலங்களில் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது முக்கியம். குறிப்பாக நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இந்த சேவைகள் எளிதில் கிடைக்க, உள்கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவது பாராட்டத்தக்க முயற்சியாகும்,” எனத் தெரிவித்தார்.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லீட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் ராய் பேசுகையில், “தேசிய அளவில் தமிழ்நாடு எங்களது முக்கிய சந்தைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் ரூ.9,100 கோடிக்கும் அதிகமான க்ளைம்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அவர்களுக்கு தேவையான நேரங்களில் துணை நிற்கும் எங்கள் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது,” என்றார்.

திண்டுக்கல் கிளை, இதுவரை டவுண் ஏரியாவில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முக்கிய பிரதான சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையிலும், கிளையின் அடையாளம் மற்றும் சேவைத் திறன் மேம்படும் வகையிலும் இந்த மாற்றம் அமைந்துள்ளது. மேலும், 60 கிலோமீட்டர் சுற்றளவில் செயல்படும் ஒரே ஸ்டார் ஹெல்த் கிளையாக இது திகழ்கிறது.

மதுரை மண்டலத்தில் (திண்டுக்கல் உட்பட) ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தற்போது 25 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட க்ளைம்கள் தீர்வு செய்யப்பட்டு, ரூ.950 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இது தென் தமிழகம் முழுவதும் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் வலுவான சேவைத் திறனையும், மக்களின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது.