• 16 Apr, 2026

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் – புரளி என உறுதி

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் – புரளி என உறுதி

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதித்துறை அகாடமிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் தகவல் சோதனையிற்குப் பின் புரளி எனத் தெரியவந்துள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதித்துறை அகாடமிக்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். வளாகம் முழுவதும் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டு, நீதிமன்ற பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.

ஆனால் முழுமையான ஆய்விற்குப் பின் எந்தவித வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மிரட்டல் தகவல் வெறும் புரளி என அதிகாரிகள் உறுதி செய்தனர்.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.