• 16 Apr, 2026

திமுக – அதிமுக பரிசுப் பொருட்கள் மோதல்: கோவையில் அரசியல் களம் சூடுபிடிப்பு

திமுக – அதிமுக பரிசுப் பொருட்கள் மோதல்: கோவையில் அரசியல் களம் சூடுபிடிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையில் திமுக மற்றும் அதிமுக இடையே பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் கடும் அரசியல் போட்டி உருவாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ளது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஹாட் பாக்ஸ் மற்றும் சில்வர் தட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குப் போட்டியாக திமுக தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி ₹2,000 மதிப்பிலான அண்டா மற்றும் வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Screenshot 2026-02-26 143411
 

இந்த பரிசுப் பொருட்கள் விவகாரம் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்களை கவரும் நோக்கில் இரு கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருவதால், கோவையில் அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.