கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
‘RTO அபராதம்’ என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறித்து வந்த கும்பலை கோவை சைபர் கிரைம் போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை நகரில் ‘RTO அபராதம்’ செலுத்த வேண்டும் என போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகள் அனுப்பி பொதுமக்களை ஏமாற்றி வந்த சைபர் மோசடி கும்பல் குறித்து பல புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு, மோசடி கும்பலின் செயல்பாட்டை கண்டறிந்தது. பொதுமக்கள் வாகன அபராதம் என்ற நம்பிக்கையில் இணைப்பை கிளிக் செய்ததும், அவர்களின் வங்கி விவரங்கள் திருடப்பட்டு பணம் பறிக்கப்பட்டது தெரியவந்தது.
போலீஸார் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபோன்ற மோசடி குறுஞ்செய்திகள் வந்தால், எந்த இணைப்பையும் கிளிக் செய்யாமல், அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்