• 16 Apr, 2026

சிங்காநல்லூர் பறக்கும் பாலம் டெண்டர் நிறைவு

சிங்காநல்லூர் பறக்கும் பாலம் டெண்டர் நிறைவு

சிங்காநல்லூர் பகுதியில் பறக்கும் பாலம் கட்டுவதற்கான டெண்டர் சமர்ப்பிக்கும் பணிகள் நேற்று (மார்ச் 3) நிறைவடைந்தன. அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ள சிங்காநல்லூரில் பறக்கும் பாலம் அமைக்கும் திட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த திட்டத்திற்கான டெண்டர் சமர்ப்பிக்கும் கடைசி நாள் நேற்று (மார்ச் 3) நிறைவடைந்தது.

சிங்காநல்லூர் சந்திப்பு பகுதியில் தினசரி அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை குறைக்கும் நோக்கில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

 

Screenshot 2026-02-26 160509
 

 

டெண்டர் பரிசீலனை செய்யப்பட்ட பின் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அடுத்தக்கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து ஓட்டம் சீராகி, பொதுமக்களுக்கு நேரச் சேமிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.