• 16 Apr, 2026

போலி நெய் தயாரிப்பு: 3,000 கிலோ பறிமுதல் – உணவு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை

போலி நெய் தயாரிப்பு: 3,000 கிலோ பறிமுதல் – உணவு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை

ஹைதராபாத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 3,000 கிலோ போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டது. மலிவு எண்ணெய்கள் கலந்து தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் சுமார் 3,000 கிலோ போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நெய் தயாரிப்பில் மலிவு விலையில் கிடைக்கும் எண்ணெய்கள் மற்றும் பிற பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த போலி நெய் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

 

 

Screenshot 2026-02-26 153509
 

 

உணவு பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருவதால் மக்கள் வாங்கும் உணவுப் பொருட்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சந்தேகமான உணவு பொருட்கள் குறித்து உடனடியாக புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.