கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோவையில் நடைபெற்ற Magic Money TN Summit கருத்தரங்கில், பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி உள்ளிட்ட முதலீடுகளில் லாபம் பெற வேண்டிய நுணுக்கங்களை அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் பகிர்ந்துகொண்டனர்.
முதலீட்டில் லாபத்தை அள்ள நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய அம்சங்கள் என்னென்ன?
தங்கம், வெள்ளி முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் முதலீட்டாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. சர்வதேச பொருளாதார மாற்றங்கள், உள்நாட்டு அரசியல் சூழல் மற்றும் சந்தை மனநிலை போன்ற பல காரணிகளால் முதலீட்டு சூழல் நாளுக்கு நாள் சவாலானதாக மாறி வருகிறது. இந்த நிலையில், முதலீட்டாளர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல் அவசியமாகியுள்ளது.
அந்த தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், Magic Money TN summit என்ற கருத்தரங்கை Magic 20 தமிழ் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி கோவையில் நடத்தியது. இந்த கருத்தரங்கில், முதலீடு, தொழில், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு, லாபகரமான முதலீட்டு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சி.கே. குமரவேல், நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்,
“இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்குப் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டாலே, நமது தனிப்பட்ட வளர்ச்சியும் முதலீட்டு வளர்ச்சியும் பல மடங்காக அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, MF Utilities நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் ராம் பேசுகையில்,
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஒழுங்கான திட்டமிடல், நீண்டகால நோக்கம் மற்றும் அபாய மேலாண்மை ஆகியவை முக்கியம் என்றும், சந்தை ஏற்றத் தாழ்வுகளால் பதற்றமடையாமல், திட்டமிட்ட முதலீட்டைத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தக் கருத்தரங்கின் மூலம், முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை அறிவுடன் நிர்வகிப்பது, சரியான நேரத்தில் சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்பது மற்றும் நீண்டகால நிதி பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த முக்கியமான பார்வைகளைப் பெற்றனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்