• 16 Apr, 2026

கோவை சத்தி சாலையில் புதிய River இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு

கோவை சத்தி சாலையில் புதிய River இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு

மின்சார வாகனங்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, ராஜதுரை இ-மொபைலிங் நிறுவனம் சார்பில் கோவை சத்தி சாலையில் River மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் தொடங்கப்பட்டது; திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

கோவை சத்தி சாலையில் புதிய River இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு: சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

கோவையில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராஜதுரை இ-மொபைலிங் நிறுவனம் சார்பில் ‘River’ மின்சார இருசக்கர வாகனங்களுக்கான புதிய விற்பனையகம் கோவை சத்தி சாலையில் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த புதிய ஷோரூமின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அஸ்வினி, சேர்மன் சுந்தரேசன் மற்றும் River நிறுவனத்தின் டீலர் டெவலப்பர் ஹெட் ரஞ்சனா ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய விற்பனையகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

நிகழ்வில் பேசிய நிர்வாகிகள், “ஸ்டைல், தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் River மின்சார ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒருமுறை சார்ஜில் 120 முதல் 130 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய திறன் மற்றும் குறைந்த மின் செலவு இதன் முக்கிய பலமாக உள்ளது,” என தெரிவித்தனர். மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

புதிய ஷோரூம் திறப்பை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய வாகன முன்பதிவுகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.