• 16 Apr, 2026

TT ஊசி ஏன் அவசியம்? உயிரைக் காக்கும் பாதுகாப்பு மருந்து

TT ஊசி ஏன் அவசியம்? உயிரைக் காக்கும் பாதுகாப்பு மருந்து

காயங்கள் மூலம் உடலுக்குள் நுழையும் டெட்டனஸ் கிருமியிலிருந்து பாதுகாப்பதற்காக TT (Tetanus Toxoid) ஊசி போடப்படுகிறது. இது நரம்பு மண்டல பாதிப்புகளைத் தடுக்கும் முக்கியமான தடுப்பூசி.

TT ஊசி ஏன் போடுறோம் தெரியுமா? முழு விளக்கம்

யாருக்காவது காலில் ஆணி குத்தினாலோ, கண்ணுக்குப் புலப்படாத சிறு காயங்களோ, உடலில் சிராய்ப்புகளோ ஏற்பட்டாலோ, மருத்துவர் உடனே TT ஊசி போட சொல்லுவார். TT என்பதன் முழுப் பெயர் Tetanus Toxoid.

இவ்வகை காயங்கள் மூலம் Clostridium tetani என்ற ஆபத்தான பாக்டீரியா உடலுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இந்த கிருமி மண்ணில், தூசியில், ஜங்குப் பிடித்த இரும்புப் பொருட்களில் அதிகமாக காணப்படுகிறது. உடலுக்குள் நுழைந்ததும் இது நச்சுத் தன்மை கொண்ட விஷத்தை உற்பத்தி செய்து, நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கிறது. இதனால் தசைகள் கடினமாகி, வாய் திறக்க முடியாமல் போவது, உடல் முழுவதும் வலி, fits போன்ற அபாயகரமான நிலைகள் ஏற்படலாம்.

முந்தைய காலங்களில் டெட்டனஸ் நோயால் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்றைய காலத்தில் TT ஊசி மூலம் இந்த நோயை பெரும்பாலும் முழுமையாகத் தடுக்க முடிகிறது. TT ஊசி ஒரு தடுப்பூசி; இது உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, டெட்டனஸ் கிருமியின் விஷத்தன்மையை செயலிழக்கச் செய்கிறது.

அதனால், ஆணி குத்துதல், ஆழமான காயங்கள், விபத்துகள், அல்லது நீண்ட நாட்களாக தடுப்பூசி எடுத்திருக்காதவர்கள் ஆகியோருக்கு TT ஊசி மிகவும் அவசியம். இது எளிய ஊசியே என்றாலும், உயிரைக் காக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு மருந்தாகும்.

👉 சிறிய காயம் தான் என்று அலட்சியம் வேண்டாம் — மருத்துவர் சொன்னால் TT ஊசி தவறாமல் போடுங்கள்.